Home > பொது அறிவு > TNPSC Exams > டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு பகுதி 2
25 QuestionsLog inwatch on youtube 
00:00:00

🎁 Claim Rewards

🎁 Login to earn rewards !!!



25 uniquely designed questions just for you to evaluate your skills in டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு பகுதி 2 quiz. Are you ready to challenge yourself and explore more? Let's get started and see how much you can score out of 25.

Please feel free to report any corrections if you come across any inaccuracies or errors. Your feedback is valuable in maintaining the accuracy of our content.

Questions

1. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது?
Answer: பட்டு நாண்
Explanation: உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்கு பட்டு நாண் பயன்படுத்த படுகிறது.Report for correction
2. அலுமினியத்தாதுவான பாக்ஸைட் கிடைக்குமிடம்?
Answer: தமிழ்நாடு
Explanation: அலுமினியம் தயாரிக்க தேவையான பாக்ஸைட் படிமங்கள்; சேலம் மாவட்டத்தில்; சேர்வராயன் மலை (ஏற்காடு); பெரம்பலூர்; கொல்லிமலை பகுதிகளில்; அதிகமாக கிடைக்கிறது.Report for correction
3. தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது?
Answer: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
Explanation: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கிறது.Report for correction
4. மாநிலங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பது?
Answer: விற்பனைவரி
Explanation: மாநிலங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பது : விற்பனைவரிReport for correction
5. நறுமணப் பயிர்களான மிளகு; ஏலக்காய்; இலவங்கம் போன்றவை பயிரிடப்படும் மாநிலம்?
Answer: கேரளா
Explanation: கேரளா நறுமண பயிர்கள் சாகுபடி மாநிலமாக கருதப்படுகிறது. நறுமண பொருட்கள் இடுக்கி; வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.Report for correction
6. இந்தியாவின் மத்திய வங்கி என்பது?
Answer: RBI
Explanation: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935-இல் தொடங்கப்பட்டதுReport for correction
7. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்?
Answer: பெரம்பூர்
Explanation: சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக; முழுமையும் எஃகினாலும் முழுமையும் காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானதுமான பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.Report for correction
8. பணவீக்கம் என்பது?
Answer: விலை ஏற்றம்
Explanation: பணவீக்கம் என்பது விலை ஏற்றம்Report for correction
9. இந்தியாவில் முதல் வணிக விமானம் அறிமுகபடுத்தப்பட்ட ஆண்டு?
Answer: 1911
Explanation: இந்தியாவில் முதல் வணிக விமானம் 1911 பிப்ரவரி 18 அன்று நடந்தது.Report for correction
10. தமிழ்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்?
Answer: மணலி
Explanation: சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Chennai Petroleum Corporation Limited) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது.Report for correction
11. தீபகற்ப இந்தியாவின் முதன்மை உணவு?
Answer: நெல்
Explanation: தீபகற்ப இந்தியாவின் முதன்மை உணவு நெல்.Report for correction
12. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?
Answer: வேளாண்மை
Explanation: இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது வேளாண்மை.Report for correction
13. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
Answer: ஆசியா
Explanation: அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் : ஆசியாReport for correction
14. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
Answer: மாண்டரின்
Explanation: சீனாவில் பேசப்படும் மாண்டரின் மொழி உலகில் மக்கள் அதிகம் பேசும் மொழியாகும்.Report for correction
15. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
Answer: அமெரிக்கா
Explanation: அமெரிக்காவில் (வாஷிங்டன் D.C.) உள்ள அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் என்ற நூலகம் உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது.Report for correction
16. இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது?
Answer: 1776
Explanation: ஜூலை 2; 1776 இல்; அமெரிக்கா ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதுReport for correction
17. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்?
Answer: ஆங்காலஜி
Explanation: புற்றுநோயியல் (Oncology) என்பது புற்றுநோய் தொடர்பான மருத்துவத் துறை ஆகும்.Report for correction
18. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
Answer: ஆர்யபாட்ட
Explanation: 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்; ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.Report for correction
19. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
Answer: அக்னி
Explanation: இந்தியாவினால் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் இருந்து தரையிறங்கும் ஏவுகணைகளில் மிகவும் முக்கியமானது அக்னி தொடர். அக்னி ஏவுகணைகள் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய நடுத்தர முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் குடும்பமாகும்.Report for correction
20. போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
Answer: ஜோனார்ஸ் சால்க்
Explanation: 1952ம் ஆண்டில்; ஜோனார்ஸ் சால்க் (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர்; போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்.Report for correction
21. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர் எந்த நாட்டினர்?
Answer: இந்தியர்
Explanation: பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார்.Report for correction
22. விதையில்லாத தாவரங்கள்?
Answer: கிரிப்டோகேம்
Explanation: விதையில்லாத தாவரங்கள் கிரிப்டோகேம்Report for correction
23. ஆக்சிஜன் படகு என்று கூறுவது?
Answer: ஹீமோகுளோபின்
Explanation: ஆக்சிஜன் படகு : ஹீமோகுளோபின்Report for correction
24. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடந்தது?
Answer: பஞ்சாப்
Explanation: ஜலியான்வாலா பாக் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டதுReport for correction
25. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
Answer: பூம்புகார்
Explanation: காவிரி நதி தமிழ்நாட்டில் தருமபுரி; சேலம்; ஈரோடு; நாமக்கல்; கரூர்; திருச்சி; தஞ்சாவூர்; மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.Report for correction